states

img

கொரோனா வார்டுகளாக மாறிய மரத்தடிகள்.... பாஜக ஆளும் ம.பி. மாநில கொரோனா அவலம்.....

போபால்:
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. ஆக்சிஜன் சிலிண்டர் களுக்கான பற்றாக்குறையால், புதிய நோயாளிகளை அனுமதிக்க முடியாமல் மருத்துவமனை திணறிக் கொண்டிருக்கின்றன. 

குறிப்பாக, பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நிலைமை மோசமாகஉள்ளது. தற்காலிக மருத்துவ மனைகள் அமைப்பதில், இங்குள்ள அரசுகள் போதிய கவனம் செலுத்துவதாக இல்லை. உ.பி. முதல்வர் ஆதித்யநாத் இப்போதும் கூட மாடுகள் மீதே அக்கறைக் காட்டிக் கொண்டிருக்கிறார். அங்குள்ள நோயாளிகள் ஆக்சிஜன் கிடைக்காமல் அரச மரத்தடிகளில் குவிந்து வருகின்றனர். சுத்தமான காற்று கிடைக்கும் என்பது உண்மை என்றாலும், அரச மரத்தடியில் இருந்தால், கொரோனா நோயாளிகளின் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும் என்று யாரோ கிளப்பி விட்டதை உண்மையென நம்பி, உ.பி. மக்கள் மரத்தடிகளில் இடம்பிடித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் கொரோனா வார்டேமரத்தடிகளுக்கு மாற்றப்பட்டுள் ளது. இங்குள்ள அகர் மால்வா மாவட்ட மருத்துவமனையில் இடம் இல்லாதவர்களுக்காகவும், மருத்துவமனைக்கே செல்ல விரும்பாத கிராமப்புற மக்களுக்காகவும் மரங்கள் நிறைந்த தோட்டங்களை கொரோனா வார்டாக மாற்றி நோயாளிகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவருகின்றனர். மரத்தின் கிளை களில் குளுக்கோஸ் பாட்டிலை தொங்கவிட்டு, அதன் மூலம் நோயாளிகளுக்கு குளுக்கோஸ் செலுத்தி வருகின்றனர்.இதுதொடர்பான வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இவ்வாறு மரத்தடியில் சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறை அதிகாரி மனீஷ் குரில் தெரிவித்துள்ளார்.

;